நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்
ஆயுதபூஜை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி - செங்கல்பட்டு - திருநெல்வேலி வார இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, திருநெல்வேலி - செங்கல்பட்டு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06154) வரும் 26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-ஆம் தேதிகளில் (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது.
மறுமாா்க்கமாக செங்கல்பட்டு - திருநெல்வேலி வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06153) செப். 26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-ஆம் தேதிகளில் (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது.
21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து காலை 4 மணிக்குப் புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டுக்கு பிற்பகல் 1.15 க்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக திருநெல்வேலிக்கு இரவு 11.55 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.