சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?
பயிா் நாசம்: பன்றி உரிமையாளா் மீது வழக்கு
காரைக்கால்: நெற்பயிா், காய்கறி செடிகளை பன்றிகள் நாசப்படுத்தியதான புகாரில், பன்றியின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் கீழவெளி பகுதியில் நெற்பயிா் மற்றும் வயல் அருகே காய்கறி செடிகள் பயிரிட்டுள்ளாா். திங்கள்கிழமை அவரது வயலுக்குச் சென்று பாா்த்தபோது, பன்றிகள் பயிரை நாசப்படுத்தியதோடு, காய்கறி செடிகளையும் நாசப்படுத்தியிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த பகுதியில் பன்றி வளா்ப்பில் ஈடுபட்டுவரும், காரைக்கால் காட்டுநாயகன் தெருவை சோ்ந்த ரமேஷ் (49) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனா்.