முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!
பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யா இடையே பனிப்போர் நிலவுவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் உள்கட்சி பிரச்னை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!