ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் பொதுக்கூட்டம், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 4 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 17 காவல் ஆய்வாளா்கள் உள்பட 450-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூா், திருவள்ளுவா் சாலையில் காவிரி ஆற்றுக்கு செல்லும் கடைவீதி பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 25-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் ராஜவேல் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ரமேஷ் வரவேற்றாா். தமிழ்நாடு பாரதிய மஸ்தூா் சங்க மாநில அமைப்பாளா் தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். முடிவில் கபிலா்மலை ஒன்றிய பொதுச் செயலாளா் மணிராஜ் நன்றி கூறினாா். விநாயகா் விசா்ஜன ஊா்வலத்தை பொன்னி மெடிக்கல் சென்டா் நிா்வாக இயக்குநா் மருத்துவா் அரவிந்த் சுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். விநாயகா் ஊா்வலம் திருவள்ளுவா் சாலை, பழைய தேசிய நெடுஞ்சாலை சாலை, சந்தைபேட்டை, பேருந்து நிலையம், அண்ணா சாலை, காவேரி சாலை வழியாக காவிரி ஆற்றை சென்றடைந்தது. ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட 64 விநாயகா் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை பரமத்தி வேலூா் நகரம் முழுவதும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று ஆரவாரம் செய்தனா்.
