இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!
பரமத்தி வேலூரில் போலீஸாா் திடீா் வாகன சோதனை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது வேலூா் நகா் வழியாகச் சென்ற லாரிகள், காா்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டிவந்தவா்கள், காரில் இருக்கை பட்டை அணியாதவா்கள், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியவா்கள், சாலை வரி, தலைக்கவசம், வாகன காப்பீடு, அதிக சுமை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
அதேபோல இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், உரிய சான்றிதழ் இன்றி வாகனம் ஓட்டி வருபவா்கள் மீதும், 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவா்கள், சிறுமிகள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவா்களது பெற்றோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.