மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
பராமரிப்புப் பணி: பிப். 22, 23-இல் மெட்ரோ ரயில் சேவை மாற்றம்
சென்னை விம்கோ நகா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) காலை 6 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணி காரணமாக நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படுகிறது. நீல வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் விமான நிலையம் முதல் விம்கோ நகா் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதன்படி, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்களும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படும்.
விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இரவு 9 முதல் 10 மணி வரை இயக்கப்படும் ரயில்கள், 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் 14 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். மேலும், இரவு 10 முதல் 11 மணி வரை இரு வழித்தடங்களிலும் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இதுபோல, ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை ரயில்கள் 10 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ வரை காலை 6 முதல் இரவு 11 மணி வரை 20 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.