செய்திகள் :

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

post image

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதாக நிதியமைச்சகம் ஆக.18-ஆம் தேதி தெரிவித்தது.

தற்போது இதை நீட்டித்து நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பருத்தி (எச்எஸ் 5201) இறக்குமதிக்கான வரி விலக்கு 2025, செப்.30 முதல் டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 5 சதவீத அடிப்படை சுங்க வரி (பிசிடி), 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (ஏஐடிசி) மற்றும் இவை இரண்டின் மீதும் விதிக்கப்படும் 10 சதவீத சமூக நல வரி என மொத்தம் பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரிக்கு விலக்களிக்கப்படுகிறது.

இது உள்நாட்டுச் சந்தையில் பருத்தி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்வதோடு விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜவுளி ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மத்திய அரசு இந்திய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பான் தொழில்நுட்பம் - இந்திய திறமை இணைந்தால் தொழில்நுட்ப புரட்சி: பிரதமர் மோடி

டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும் என்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி கூறினார்.இந்தியா-ஜப்பான் 15-ஆவது ஆண்ட... மேலும் பார்க்க

தில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை: காலை முதல் தொடர் மழை!

புது தில்லி: தேசிய தலைநகர் புது தில்லிக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே விடாமல் மழை பெய்து வருகிறது.புது தில்லியின் பெ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சாமோலி மாவட்டம் தேவல் பகுதியிலும் ருத்ரபிரயாக் மாவட்டம் புஷேதர் பகுதியிலும் ஏற்பட்ட மேக வெடிப... மேலும் பார்க்க

டோக்கியோவில் பிரதமர் மோடி!

ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணமாக தில்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி டோக்கியா நகருக்குச் சென்றடைந்தார்.15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்க... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ... மேலும் பார்க்க

காற்று மாசுபாட்டை குறைத்தால் ‘இந்தியா்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்’

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அற... மேலும் பார்க்க