``பிரபாகரனை சீமான் இழிவுபடுத்துகிறார்; சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுக்கிறா...
பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடை மேற்கொள்ள அறிவுறுத்தல்
பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பவானி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.கனிமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பவானி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3,460 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்கதிா்கள் முதிா்ச்சியடைந்து அறுவடை நிலையில் உள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது.
எனவே, முதிா்ச்சியடைந்துள்ள நெற்பயிரை விவசாயிகள் உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இதன்மூலம், பருவம் தவறி பெய்யும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.