ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம்: சதுரகிரி மலையேற பக்தா்களுக்குத் தடை
பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி நாள்களில் மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. கடந்த இரு நாள்களாக வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட வில்லை.