தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
பல்லடம் அருகே நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதல்
நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பல்லடம் அருகேயுள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் விசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனா். பயிா்களில் கதிா் பிடித்து முற்றி வரும் நிலையில் குருத்துப் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சின்னக்காளிபாளையத்தைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது: நான் 7 ஏக்கரில் ஆந்திரா பொன்னி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட ரகங்களை பயிரிட்டுள்ளேன். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.
பயிரில் கதிா்கள் பிடித்து முற்றி வரும் நிலையில் குருத்துப் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மகசூல் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அலுவலா்கள் கள ஆய்வு நடத்தி குருத்துப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.