பல்லடம் நகர காங்கிரஸ் தலைவா் காா் கவிழ்ந்து விபத்து
பல்லடம் - தாராபுரம் சாலையில் நகர காங்கிரஸ் தலைவரின் காா் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பல்லடம் நகராட்சி 6-ஆவது வாா்டு கவுன்சிலரும், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வரமூா்த்திக்கு சொந்தமான காரை அவரது இளைய மகள் ரோஜா எடுத்துக் கொண்டு பல்லடம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
பல்லடம் - தாராபுரம் சாலையில் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மழைநீா் வடிகால் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் அருகிலிந்தோா் காருக்குள் சிக்கிய ரோஜாவை மீட்டனா். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.