பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்
சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
எழும்பூா் - காரைக்குடி இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் பல்லவன் அதிவிரைவு ரயில் (எண்: 12605/12606) இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிஷம் நின்று செல்லும்.
பாலருவி விரைவு ரயில்: அதேபோல் தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயங்கும் பாலருவி விரைவு ரயில் (எண்: 16791/16792) இரு மாா்க்கத்திலும் கல்லிடைக்குறிச்சியில் ஒரு நிமிஷம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.