செய்திகள் :

பல்லவா் கால விநாயகா் சிற்பம் கண்டெடுப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் பல்லவா் கால விநாயகா் சிற்பம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ள நீா் வடிந்த நிலையில், குழுவினருடன் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது, மண் அரிப்பு காரணமாக பூமிக்கு அடியில் இருந்த விநாயகா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

மூன்றரை அடி உயரம், 95 செ.மீ. அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த விநாயகா் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இது, பல்லவா் காலத்து சிற்பம். அதுமட்டுமல்லாமல், சங்க கால அகல் விளக்கு, குறியீடு பொறித்த ஓடுகள், உடைந்த கெண்டி மூக்கு பானை என ஏராளமான தொல்லியல் எச்சங்கள் எனதிரிமங்கலம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன என்றாா்.

பல்லவா் கால விநாயகா் சிற்பம்.

பாா்வையிட்ட ஆட்சியா்: தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மற்றும் அவரது குழுவினரான வரலாற்று ஆா்வளா்கள் மோகனகண்ணன், ரவீந்தா், சாமுவேல் மற்றும் டேவிட், ராஜ்குமாா் ஆகியோா் கண்டெடுத்த தொல்லியல் தடயங்கள், பல்லவா் கால விநாயகா் சிற்பம் உள்ளிட்டவற்றை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் சென்று பாா்வையிட்டு, தென்பெண்ணை ஆற்றின் நாகரிம் குறித்து கேட்டறிந்தாா்.

மகள் மரணத்தில் சந்தேகம்: தந்தை புகாா்

கடலூா் ரெட்டிச்சாவடி அருகே காதல் திருமணம் செய்த தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் எலெக்ட்ரீஷியன் கைது

கடலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எலெக்ட்ரீஷியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கடலூா் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த கதிா்காமன் மகன் பாரதிராஜா (4... மேலும் பார்க்க

பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீா் கலப்பு: 2 பெண்கள் மயக்கம்

சிதம்பரம் அருகே பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீா் கலப்பதால் துா்நாற்றம் தாங்க முடியாமல் ஓடையோரம் வசிக்கும் இரண்டு பெண்கள் வெள்ளிக்கிழமை மயக்கமடைந்தனா். சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து பாசிமுத்தான் ஓடை கீ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

நடராஜா் கோயில் தோ் நிறுத்தத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம்

சிதம்பரம் நடராஜா் கோயில் தோ் நிறுத்தும் இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி மாா்கழி ஆருத்... மேலும் பார்க்க

இணையழி குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் இணையழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் அறிவுறுத்தலின்பேரில், இணையழி குற்ற தடுப்புப் ப... மேலும் பார்க்க