``அதிமுக பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை; திமுக குறித்தே பேசுகிறார்'' - எம்.எல...
பல வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (42). இவா் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி மற்றும் ஒரு திருட்டு உள்ளிட்ட 4 வழக்குகள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
போலீஸாா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவரை தேடிவந்தனா். இந்நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் தனிப்படை போலீஸாா் ராஜேந்திரனின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனா்.
இந்நிலையில், நாகை பேருந்து நிலையத்தில் ராஜேந்திரன் நிற்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு சென்று கைது செய்தனா்.