செய்திகள் :

பளு தூக்கும் பயிற்சி: 270 கிலோ எடை கம்பி கழுத்தில் விழுந்து வீராங்கனை பலி!

post image

பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்ததில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளியில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றவராவர்.

இந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை(பிப். 18) பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர் தலைக்குமேல் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது.

அதிக எடையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து முறிந்த நிலையில், பயிற்சிக் கூடத்திலிருந்தோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வீராங்கனையின் கழுத்தில் எடை கம்பி விழும் விடியோ சமூக வலைதளஙக்ளில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெஞ்சை கசக்கும் இந்த விடியோ பார்வையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக எடையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து முறிந்ததாகவும், இதன்காரணமாகவே அவர் உயிர் பிரிந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று(பிப். 19) காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவருடன் இருந்த பயிற்சியாளருக்கு லேசான காயம் உண்டானது.

இந்த மரணத்தில் எவ்வித சந்தேகமும் எழாத நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரும் புகார் எதுவும் தரவில்லை. இதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டபின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க