செய்திகள் :

``பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை செய்தால் இனி இதுதான் தண்டனை...!'' -அன்பில் மகேஸ் எச்சரிக்கை

post image
கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல திருச்சியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டிருக்கின்றனர். பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் நடக்கும்  பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

இது தொடர்பாக பேசிய அவர், “ பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்.

இந்த சம்பவத்தில் உண்மைதன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில், யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டனையுடன் மட்டும் நிறுத்தப்படாது. அவர்களின் கல்வித்தகுதி  சான்றுகளை முழுமையாக ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்போம். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அம... மேலும் பார்க்க

``பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்... அல்வா சாப்பிடும் முதல்வர்" -சீமான் கண்டனம்

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளும் திமுக அரசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் வ... மேலும் பார்க்க

Maharashtra: ``வயது வந்த மக்களை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது எப்படி?'' -ராகுல் காந்தி கேள்வி

மகாராஷ்டிரா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையின் மாநிலத்தின் மொத்த வயதுவந... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும்!'' -முதல்வர் ரங்கசாமி

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011-ல் தனிக்கட்சி தொங்கி ஆட்சியைப் பிடித்தார். 2016 தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியப் பறிகொடுத்த அவர், 2021-ல் பா.ஜ.க கூட்டணியுடன் மீண்டும் ஆட்ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: கட்டுமஸ்தான உடல், வயது குறைவு... நன்றாக இருந்தவர்கள் திடீரென உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: "நல்ல கட்டுமஸ்தான உடம்பு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை... வயசு 45 தான், 55 தான் பொசுக்குனு செத்துட்டார்' என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இப்படி உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும், திடீ... மேலும் பார்க்க

Health: அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு..!

அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை 'சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப... மேலும் பார்க்க