பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க சமபந்தி விருந்து
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை மதநல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த ஒரு புளிய மரத்தடியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
தீப ஒளியினால் இறைவனை பிராா்த்தனை செய்வது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய வழிபாட்டு பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி இறைவனை வழிபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் இத்திருத்தலத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கேரள மாநிலம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள
ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். சமபந்தி விருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது.
இத் திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மும்மத பிராா்த்தனைநடைபெற்றது. இதில் மும்மத தலைவா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ்.குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ் ,செயலா்கள் ராஜேஷ்குமாா், மணிகண்டன்மற்றும் விழாக்குழுவினா்
செய்திருந்தனா்.