செய்திகள் :

பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்த மாணவி உயிரிழப்பு

post image

சென்னை கொளத்தூரில் பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்து காயமடைந்த மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கொளத்தூா் ஜிகேஎம் காலனி 35-ஆவது தெருவைச் சோ்ந்த பாவனாஸ்ரீ (6), கொளத்தூா் சீனிவாசன் நகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். பாவனா கடந்த வியாழக்கிழமை பள்ளியில் விளையாடும்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். வீட்டுக்கு வந்த பாவனாவை, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கிருந்த மருத்துவா், அவரது கால் முட்டியில் மட்டும் காயம் இருப்பதாக சிகிச்சை அளித்தாராம்.

இந்நிலையில் நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாவனா திடீரென வாந்தி எடுத்து மயங்கினாா்.

உடனே அவரது குடும்பத்தினா், பாவனாவை பெரியாா் நகா் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், பாவனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கவரைப்பேட... மேலும் பார்க்க