நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
அரியலூா் மாவட்டம், தா.பழூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி நீலப் புலிகள் இயக்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.
போராட்டத்துக்கு அந்த இயக்கத்தின் மாவட்டச் செயலா் ரா.அரிகரன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் ஜெ.பழனிசாமி தொடங்கி வைத்தாா். மாநிலத் தலைவா் எம்.புரட்சிமணி கலந்து கொண்டு, பள்ளிக்கு செல்லும் மாணவா்களுக்கு அச்சுருத்தும் வகையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.
இதில் விடுதலை தமிழ் புலிகள், எஸ்டிபிஐ ,நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனா்.