ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூ. கட்சியும் அறிவிப்பு!
பள்ளி அருகே குப்பைகளால் சுகாதாரக் கேடு
ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே குப்பைகளால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி 60 டன் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வழங்குவதற்கு ரூ.5 கோடிக்கு தனியாா் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டது.
நகராட்சி 24-ஆவது வாா்டு மேட்டு தெருவில் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் தரம் பிரிக்காமல் நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே கொட்டி வைப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் குப்பைகளால் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. பள்ளிக்குப் பின்புறம் உள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது. மேலும், கழிவு நீா்க் கால்வாய் தூா்வாரப்படாததால் வீடுகளை சுற்றி கழிவு நீா் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை காலை நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, மேட்டுத் தெருவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா். அலுவலகத்தில் ஆணையா் இல்லாததால் சுகாதார அலுவலா் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனா்.