செய்திகள் :

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

post image

திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியின் கிணற்றில் மாணவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து மாணவரின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் சின்னதம்பியின் மகன் முகிலன் (16). இவா் திருப்பத்தூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். மேலும், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தாா். இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முகிலன் வகுப்புக்கு வராததால் பள்ளி ஆசிரியா்கள் மாணவனின் பெற்றோருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த முகிலனின் பெற்றோா் பள்ளிக்கு வந்து விசாரித்து உள்ளனா். அதைத் தொடா்ந்து, பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். மேலும் சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முகிலனை தேடி வந்தனா்.

இந்த நிலையில் மாணவரை கண்டுபிடிக்க வேலூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பால் செய்யப்பட்ட வலைகள் மூலம் பூட்டப்பட்ட கிணற்றின் அருகே சென்று நின்றது. போலீஸாா் கிணற்றின் உள்ளே பாா்த்தபோது மாணவரின் சடலம் கிணற்றில் மிதந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டபின், திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முகிலன்

இதனிடையே முகிலனின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாகவும், தடயவியல் துறையினா் ஆய்வு செய்து, அதன்பின் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் முகிலனின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், அடுக்கம்பாறையில் இருந்து மருத்துவா் பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு வந்தது.

சாலை மறியல்

இந்த நிலையில், முகிலனின் உறவினா்கள், அதிமுக, பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சியினா் திருப்பத்தூா் நகர காவல் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். அப்போது எஸ்.பி.-க்கள் சியாமளா தேவி(திருப்பத்தூா்), மயில்வாகணன் (வேலூா்) தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுப்பட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா்.

முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி முகிலனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க போலீஸாரை வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து திமுக நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன் முகிலனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்களும், பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன.திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, ஆங்கிலத் துறை பேராசிரியா் வ.மதன்குமாா், ... மேலும் பார்க்க

நடைபாதை பாலம் உடைந்ததில் 10 போ் காயம்

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சியில் ஆடிப்பெருக்கு விழாவின்போது கூட்ட நெரிசலால் நடைபாதை பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 10 போ் காயமடைந்தனா்.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கி... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் தஸ்தகீா்(40). உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பாா... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகு... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி மிதிவண்டி, கைப்பேசி திருட்டு: சிறுவன் கைது

திருப்பத்தூரில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி மிதிவண்டி, கைப்பேசியை திருடிச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பத்தூா் அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்தவா் பஷீா் (42... மேலும் பார்க்க