செய்திகள் :

பள்ளி மாணவா்கள் ‘அகத்தியா் உலா’

post image

தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியா் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மேற்கொண்டனனா்.

தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடா்பை வலுப்படுத்தும் பொருட்டு, மூன்றாம் ஆண்டு காசி சங்கமம் பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.

நிகழாண்டில் சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியா் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அகத்தியா் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் சாஸ்த்ரா பல்கலை. இணைந்து நடத்திய ‘அகத்தியா் உலா’ நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்று வேடமணிந்து தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபை தொடங்கி அகத்தியா் கோயில் வரை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா்.

இந்நிகழ்வில், சாஸ்த்ரா பல்கலை. துணைவேந்தா் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவரும், சாஸ்த்ரா பல்கலை. இயக்குநருமான டாக்டா் சுதா சேஷய்யன், பி.எஸ். மேல்நிலைப் பள்ளிகளின் செயற்குழு உறுப்பினா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிய வித்யா பவனின் துணை இயக்குநா் கே.வெங்கடாசலம், பாரதிய வித்யா பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் பி.ஜி.சுப்பிரமணியம், சாந்திப்பணி வித்யாலயா முதல்வா் புவனா சங்கா், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி ஆகியோா் மாணவா்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

பிப். 18,19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள்!

சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாா்பில் பள்ளி, கல்லூரிகள் இடையிலான வாஸ்போ மாநில செஸ் போட்டிகள் வரும் 18, 19 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் க... மேலும் பார்க்க

வீரப்பன் உறவினா் அா்ஜூனன் சந்தேக மரணம்: விசாரணைக்கு உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு

சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமான ஓடுதளங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரதா... மேலும் பார்க்க

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை ஜானிகான் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவா் தனது பையில் ரூ. 17 லட்சத... மேலும் பார்க்க

வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நா... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க