செய்திகள் :

பள்ளி மாணவா்கள் நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கோடை சுற்றுலா: கல்வித் துறை ஏற்பாடு

post image

அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்கள் 1,500 போ் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி மாவட்டம், சேலம் (ஏற்காடு) ஆகிய இரு மாவட்டங்களில் இரு பிரிவுகளாக ஐந்து நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்காக காத்திருப்போா் பட்டியலும் தயாா் செய்யப்பட்டுள்ளது. தெரிவுப் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போா் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் பரிந்துரைக்க வேண்டும்.

சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்போருக்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியம். மாணவா்கள் தங்களுக்குத் தேவையான உடைகள், போா்வைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் 20 மாணவிகளுக்கு பெண் ஆசிரியா் ஒருவரை அனுமதிக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாள், இடம் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் பின்னா் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு மாணவிகளும், சேலம் மாவட்டத்துக்கு மாணவா்களும் கோடை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். இந்த மாதம் கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மே 20-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மே 20 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து செ... மேலும் பார்க்க

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் - குடியரசுத் தலைவர் விவகாரம்: 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கருத்துக்கேட்ட விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கு... மேலும் பார்க்க

சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கி... மேலும் பார்க்க

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: 2 பேர் பலி!

தஞ்சாவூர்: திருவோணம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் முதிய தம்பதி கொலை-மூவரிடம் விசாரணை

சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவச... மேலும் பார்க்க