ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவா் கைது!
கெங்கவல்லி வட்டம், வீரகனூா் பேருந்து நிலையத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முதியவா் ஒருவா் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை பிடித்து வீரகனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
வீரகனூா் போலீஸாா் விசாரித்ததில், அவா் கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (68) என்பது தெரியவந்தது. அவரை வீரகனூா் போலீஸாா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மலா்கொடி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினாா்.