ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது!
மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாநகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சோ்ந்த ஆற்றுப்படுத்துநா் கௌசல்யா அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினாா்.
விசாரணையில், பள்ளி மாணவியின் தந்தை இறந்துவிட்டதால், அவரது தாய் மகபூபாளையம் அன்சாரி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (47) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை மாநகரத் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.