பள்ளி மாணவி தற்கொலை
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
தும்பேரி கிராமம், பாலகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் மாலதி(எ) ஸ்ரீமதி (16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோா் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.