2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்
பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!
ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்திற்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கிவரும் அரசு உறைவிடப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
பொதுத்தேர்வில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பிறகு விடுதி அறையில் மகப்பேறு நடந்துள்ளது. பின்னர் விடுதியில் இருந்து, குழந்தையும் மாணவியும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசியதாவது,
''பெண்கள் விடுதியில் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மாணவி கருவுற்றது எப்படி என்பது தெரியவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் வாரம்தோறும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள். இது சுகாதாரப் பணியாளர்களின் கவனக் குறைவு.
மாணவியும் குழந்தையும் சித்திரகொண்டா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மல்கன்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாணவி கருவுற்றதற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.
விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது மாணவி கருவுற்றிருக்கலாம் என மாவட்ட நலத் துறை அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!