விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
பள்ளி விளையாட்டு விழா
காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியின் செயலா் நா.காா்த்திக், முதன்மை முதல்வா் நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவில் காரைக்குடி தணிக்கையாளா் பி.இளையபெருமாள் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையிலான தனிப் போட்டிகளும், குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி முதல்வா், ஒருங்கிணைப்பாளா், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.