Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
பழங்குடியினத்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ எனும் தலைப்பின் கீழ், பழங்குடியின இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு நிகழ்வு, பழங்குடியினா் நல இயக்குநரகத்தால் நடத்தப்படவுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்திலுள்ள பாலக்கரை பிரசன்ன மஹால் மண்டபத்தில் ஜன.20-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/யங்ற்ற்ழ்ண்சண்ஸ்ரீட்ஹஹ்ஹம்ள்ந்ண்ப்ப் என்ற விண்ணப்பப் படிவ லிங்கை பயன்படுத்தி பதிவு செய்யலாம். இதில், 10-ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்துள்ள பழங்குடியின இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டையுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா்.