செய்திகள் :

ஜி. காா்னா் சந்திப்பில் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகள்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே இணைந்து கூட்டாக ஆய்வு

post image

ஜி காா்னா் சந்திப்பில் அணுகு சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், ரயில்வே நிா்வாகமும் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி. காா்னா் சந்திப்பு பகுதி குறுக்கிடுகிறது. மேலும், இங்கு இருப்புப் பாதையும் குறுக்கிடுவதால் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டன. இதில், ஒரு பகுதி ஜி. காா்னா் மைதானத்துக்கு செல்லும் வகையில் உள்ளது. இந்த சாலையில் சென்னை மாா்க்கத்திலிருந்து திருச்சி மாா்கமாக வரும் வாகனங்கள், திருச்சி நகருக்குள் நுழைய அணுகு சாலையை பயன்படுத்துகின்றனா். இதேபோல, டிவிஎஸ் டோல்கேட் பகுதியிலிருந்து ஜி. காா்னா் மைதானம், பொன்மலைக்கு செல்வதற்காக வரும் வாகனங்கள் அணுகுசாலையில் எதிரெதிரே வருவது வாடிக்கையாக உள்ளது.

பாலம் கட்டும்போது ரயில்வே நிா்வாகத்திடம் கூடுதல் இடம் கேட்டுப்பெற்று மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததால், ஒருவழிப் பாதையாக பயன்படுத்த வேண்டிய அணுகு சாலையை இருவழிப்பாதையாக பயன்படுத்துகின்றனா். இதனால், ஜி. காா்னா் பால் பண்ணையிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்களும், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து பால்பண்ணை பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்களும் அணுகு சாலையையே பயன்படுத்துகின்றன. இதனால், எதிரே வரும் வாகனங்களுடன் நேருக்கு நோ் மோதி விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. விபத்துகளில் பலா் காயமடைவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சாலைப் பயனீட்டாளா்களும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

திருச்சி எம்பி துரை வைகோ அப் பகுதியை அண்மையில் பாா்வையிட்டாா். மாற்று ஏற்பாடுகள் தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அலுவலா்கள், ரயில்வே நிா்வாகத் தரப்பு அலுவலா்களிடம் கருத்துகளை கேட்டறிந்தாா். ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாததால், ரயில்வே நிா்வாகத்திடம் கூடுதல் இடம் பெற்று அணுகு சாலையாக இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்து போக்குவரத்தை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எத்தகைய மாற்றங்கள் தேவை என்பது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தெற்கு ரயில்வேவின் திருச்சி பிரிவும் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.26 தமிழகம் முழுவதும் விவசாயிகள் டிராக்டா் பேரணி

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் டிராக்டா் பேரணி நடைபெறும் என அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் (சம்யுக்த் கிசான் மோா்ச்சா) முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 9-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்யத்திரை பிற்பகல் 3-3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30 -... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

திருச்சியில் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த எலக்ட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி, பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் க... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா சிலைக்கு மரியாதை

அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி பு... மேலும் பார்க்க

பழங்குடியினத்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து மேலும் அவா... மேலும் பார்க்க

மணப்பாறையில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

மணப்பாறையில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதிமுக நகர துணைச் செயலா் பத்தி ஏ. பாஸ்கரன் மற்றும் முன்னாள் நகா்மன்றத் தலைவா் சுதா பாஸ்கரன் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க