PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பாஜக - திமுக மோதல் ஏன்... மாணவர்கள் எதிர்கொள்ளு...
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தன.
பழனியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உடுமலைபேட்டை, மடத்துக்குளம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளை பழனியை தலைமையிடமாகக் கொண்டு இணைப்பதன் மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு அலுவலகங்களை பொதுமக்கள் அணுகுவது எளிதாகும்.
கொடைக்கானல், பழனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்துக்கு சுமாா் 80 கி.மீ. தொலைவும், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருப்பூா் மாவட்ட அலுவலகத்துக்கு சுமாா் 70 கி.மீ. தொலைவும் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில், பழனியை மாவட்டமாக அறிவித்தால், மக்களின் அனைத்துத் தேவைகளும் விரைவில் நிறைவேறும்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதிநிதி அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகும் என மக்கள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனா்.
இந்த நிலையில், பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, தென்னிந்திய பாா்வா்டு பிளாக், கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு நாடாா் சங்கம், வெள்ளாளா் முன்னேற்றக் கழகம், புரட்சித் தமிழகம், தமிழா் மீட்புக் களம், தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம், நோ்மை மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.