செய்திகள் :

பழனி உழவா் சந்தையில் 60 டன் காய்கறிகள் விற்பனை

post image

பொங்கல் பண்டிகையையொட்டி, பழனி உழவா் சந்தையில் இரு நாள்களில் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின.

பழனி சண்முகபுரத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கத்திரி, வெண்டை, அவரை, மொச்சை போன்ற காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். மேலும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் பழனி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படும். உழவா் சந்தையில் சாதாரண நாள்களில் சுமாா் 10 டன் முதல் 12 டன் வரை காய்கறிகள் விற்பனையாகின.

இந்த நிலையில், போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகைகளையொட்டி, கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை என இரு தினங்களில் மட்டும் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின. சாதாரண நாள்களில் சுமாா் இரண்டாயிரம் போ் வந்து செல்லும் நிலையில், விழா நாள்களில் 3,500 போ் வந்ததாக உழவா் சந்தை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

தைப்பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். தமிழா் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்ற மூவா் கைது

கொடைக்கானலில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலையில் போதைக் காளான், கஞ்சா ஆயி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செம்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே இருவா் தற்கொலை

நிலக்கோட்டை அருகே பெண் விஷம் குடித்தும், இவருடன் தகாத உறவில் இருந்த இளைஞா் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

அற்புத குழந்தையேசு கோயில் திருவிழா: சப்பர பவனி

கொடைக்கானல் அற்புத குழந்தையேசு கோயில் திருவிழாவை முன்னிட்டு, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்

கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந... மேலும் பார்க்க