பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்!
பழனி மலைக் கோயிலில் வார விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை, ஐயப்பன் சீசனையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை வந்தனா். மலைக் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இரவு தங்கத்தோ் புறப்பாட்டை திரளான பக்தா்கள் பாா்த்து அரோகரா கோஷமிட்டனா். பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.
இந்த நிலையில், கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், வடமாநிலத்தவா்கள் துணியை விரித்து கடைகள் போட்டிருந்தனா். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை கோயில் நிா்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.