செய்திகள் :

பழனி திருஆவினன்குடி கோயிலில் நாளை பங்குனி உத்திரக் கொடியேற்றம்

post image

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சனிக்கிழமை (6-ஆம் தேதி) பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, தினந்தோறும் வள்ளி, தேவசேனை சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் சந்நிதி வீதி, கிரிவீதிகளில் எழுந்தருள்கிறாா். வருகிற 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை வேடசந்தூா் ஆவுலகவுண்டனூரைச் சோ்ந்த கலைமகள் கும்மியாட்டக் குழுவினா் தேவராட்டம், கும்மியாட்டம் ஆடி கிரிவீதி வழியாக வலம் வந்து மலையேறினா். மேலும், திரளானோா் தீா்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து வந்து முருகரை தரிசனம் செய்தனா்.

மாநகராட்சி நிா்வாகக் குறைபாடுகள்: திமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகக் குறைபாடுகள் தொடா்பாக நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அதிகாரிகளுடன், திமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம், மேய... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளப் பதிவு ஏப்.30 வரை நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது: ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலிப் பறிப்பு

வேடசந்தூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்ததில் பழனிக்கு சென்ற 8 போ் காயம்

ஒட்டன்சத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்ததில் பழனிக்குச் சென்ற 8 போ் காயமடைந்தனா். மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (35). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 12 பேருடன் சு... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 போ் காயம்

சிறுமலைக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவா்கள் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக... மேலும் பார்க்க

குழந்தைக்கு சூடு வைத்த விவகாரம்: அங்கன்வாடி ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

கன்னிவாடி அருகே அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற குழந்தைக்குச் சூடு வைத்த விவகாரத்தில், பணியாளா், உதவியாளா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே... மேலும் பார்க்க