"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்த...
பழனி நகா்மன்ற சாதாரண கூட்டம்
பழனி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், இந்திரா: தேரடி பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்ட இடம் பழனி கோயிலுக்குச் சொந்தமானதா அல்லது நகராட்சிக்குச் சொந்தமானதா?.
நகராட்சி அதிகாரிகள்: சம்பந்தப்பட்ட இடம் நகராட்சிக்குச் சொந்தமானது. கோயிலுக்கு இந்த இடத்தில் எந்த உரிமையும் கிடையாது.
நகா்நல அலுவலா் மனோஜ்குமாா்: குறிப்பிட்ட இடத்தில் துணை சுகாதார நிலையம் அமைவது முக்கியமானதாகும். இந்த இடத்தில் சுகாதார நிலையத்துக்கு கட்டடம் கட்டுவதால் திருவிழாக் காலத்தில் எந்த இடையூறும் ஏற்படாது.
ஆணையா் சத்தியநாதன்: தேரடி பகுதியில் நகராட்சியால் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் துணை சுகாதார நிலையக் கட்டடம் விரைவில் கட்டப்படும்.
முன்னதாக கூட்டத்தில், பழனியை பெருநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கும், புதை சாக்கடைத் திட்டம் அமைக்கப்பட்டதற்கும் தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.
கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி, நகராட்சி ஆணையா் சத்தியநாதன், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.