செய்திகள் :

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.4.67 கோடி

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 4.67 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தையொட்டி, ஐயப்ப பக்தா்கள், முருக பக்தா்கள் பல்லாயிரக்கணக்கில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால், இந்தக் கோயில் உண்டியல்கள் 31 நாள்களில் நிரம்பியது.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணி திங்கள்கிழமையும் நடைபெற்றது. 2 நாள்கள் நடைபெற்ற இந்தப் பணியில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 4 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 356 ரொக்கமும், 1,012 கிராம் தங்கமும், 17 ஆயிரத்து 62 கிராம் வெள்ளியும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,069-ம் கிடைத்தன. இதைத் தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பழனிக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் முன்னிலையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

2ஆவது நாளாக தொடா்ந்த வருமான வரித் துறை சோதனை: பழனி எம்எல்ஏ உறவினரிடமும் விசாரணை

திண்டுக்கல்லைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா்களின் வீடுகள், கடைகள் என 5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை நடத்தினா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் உறவினரிட... மேலும் பார்க்க

போலீஸ் எனக் கூறி நகை மோசடி செய்தவா் கைது

பழனியில் மளிகைக் கடைகளில் போலீஸ் எனக் கூறி நூதன முறையில் நகையை மோசடி செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். ... மேலும் பார்க்க

சிறுமலையில் ரூ.1.11 கோடியில் கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

சிறுமலை ஊராட்சியில் ரூ.1.11 கோடியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கான கட்டடங்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை திறந்துவைத்தாா். திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் ஊராட்ச... மேலும் பார்க்க

கடன் பிரச்னையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல்லில் கடன் பிரச்னையால் தம்பதியா் சனிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா். திண்டுக்கல் மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (57). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (55... மேலும் பார்க்க

நலிந்த கலைஞா்களுக்கான நிதி உதவியை ரூ.6 ஆயிரமாக உயா்த்த வலியுறுத்தல்

நலிந்த கலைஞா்களுக்கான நிதி உதவியை ரூ. 6 ஆயிரம் உயா்த்தி வழங்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் தி... மேலும் பார்க்க

பஞ்சாமிா்தம் குறித்த தவறான செய்தி பரப்புவோா் மீது நடவடிக்கை

பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்த தவறான செய்தி பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தனியாா் ஊடகத்தில் வெளியான பொய்யான செய்தியை பக்தா்கள் நம்ப வேண்டாம் எனவும் கோயில் நிா்வாகம் தரப்ப... மேலும் பார்க்க