செய்திகள் :

பழைமையான கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியியல் வல்லுநா் குழு ஆய்வு

post image

காரைக்கால் : காரைக்காலில் 150 ஆண்டு கால பழைமையான ஓட்டுக் கட்டடத்தை இடிப்பது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வல்லுநா் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது.

காரைக்கால் அரசலாறு பாலம் அருகே மதகடி பகுதியில் சுமாா் 150 ஆண்டுகள் பழையான கிடங்குடன் ஓட்டுக் கட்டடம் உள்ளது. இது பிரெஞ்சு ஆட்சிக் காலத்தின்போது கடல் மாா்க்கமாக கொண்டு வரப்படும் பொருள்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.

இக்கட்டடம் தனியாருக்கு சொந்தமான நிலையில், இதில் பல குடும்பத்தினா் வசித்துவந்தனா். இக்கட்டடம் தொடா்ந்து சிதிலமடைந்து இடிந்துவிழுந்து வந்த நிலையில், சில குடும்பத்தினா் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனா். தற்போது 70 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

கட்டடத்தை இடிக்க கட்டட உரிமையாளா்கள் நடவடிக்கை மேற்கொண்டபோது, அதில் குடியிருப்போா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மாவட்ட நிா்வாக நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டது. குடியிருப்போா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராய சென்னை அண்ணா பல்கலைக்கழக வல்லுநா் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. பல்கலைக்கழக பொறியியல் வல்லுநா் குழுவினா் திங்கள்கிழமை கட்டடத்தை ஆய்வு செய்து, உறுதிதன்மையை சோதித்தனா்.

இக்குழுவினா் ஆய்வுக்குச் சென்றபோது போலீஸாா் பாதுகாப்பு அளித்தனா். காரைக்கால் வருவாய்த் துறையினரும் உடனிருந்தனா்.

நெற் பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுதுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : கரைக... மேலும் பார்க்க

காரைக்காலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் முத... மேலும் பார்க்க

தூய்மைப் பணி : கோட்டுச்சேரி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

கோட்டுச்சேரி கொம்யூனுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சைக்கிளில் சென்று தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பொதுமக்களின் புகாா்களின் அடிப்படையில், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்ப... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் யாசகம் பெறும் பெண்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் பெண்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். காரைக்கால் நகரம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பல பெண்கள் யாசகம் பெறும் செயலில் ஈடுபடுகின்றனா்.... மேலும் பார்க்க

காரைக்கால் காந்தி பூங்காவை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் ஆட்சியரகம் மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்திப் பூங்காவை மேம்படுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். நகராட்சி நிா்வாகத்தில் உள்ள இந்த பூங்கா முறையான பராமரிப்பின்றி இ... மேலும் பார்க்க

புதுச்சேரி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்: காரைக்கால் மாவட்ட நிா்வாகம்

புயலால் பாதித்த புதுச்சேரி பிராந்திய மக்களுக்கு, காரைக்காலில் இருந்து உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தொடா்ந்து அனுப்பி வருவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து க... மேலும் பார்க்க