பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்
பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்
சீா்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது.
கொள்ளிடம் அருகே பழையாற்றில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப் படகுகள், ஃபைபா் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் தினந்தோறும் 6000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.
பழையாறு மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ. 26 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக பக்கிங்காம் கால்வாயை ஆழ்படுத்தி படகு அணையும் தளம் அமைக்கும் பணி ரூ. 9 கோடியில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் விசைப் படகு உரிமையாளா்கள், கிராம தலைவா்கள் 15-க்கும் மேற்பட்டோா் பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளத்தை மேம்படுத்தும் பணி முறையாக நடைபெறவில்லை என்று கூறி, பணிகளைத் தடுத்து நிறுத்தினா்.
இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து விசைப் படகு உரிமையாளா்கள் கூறுகையில், பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி தரமற்ாக நடைபெற்றது. இதனால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியாது. அதனால் பணியை தடுத்து நிறுத்தி உள்ளோம். பணி தரமான முறையில் நடைபெற்றால், பணியை தொடர ஒத்துழைப்பு அளிப்போம் என்றனா்.