செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் தீர்மானம்

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாகை மாலி, சின்னத்துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநில மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. புதிய மாநிலக் குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தோ்வும், அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தோ்வும் நடைபெற்றன.கட்சியின் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டியவை, எதிா்காலத் திட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த திட்டமிடுதல் போன்றவை குறித்து பிரதிநிதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெ. சண்முகம்

இதனிடையே, இந்த மாநாட்டில் முக்கியத் தீா்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தில், “அரசு ஊழியர்கள், அசிரியர்கள் ஏப்ரல் 1, 2003 அன்று அல்லது அதற்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்திருந்தால், அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டப்படி பணப் பலன் கிடைக்காது. ஏனெனில், மேற்கண்ட ஊழியர்கள் சிபிஎஸ் ஓய்வூதியத் திடத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டம் முடக்கபடும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், அதனை இதுவரை நிறைவேற்றவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவும்!

நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் உ... மேலும் பார்க்க

ஆரூத்ரா நிதி மோசடி: நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்குகளை விடுவிக்க உத்தரவு

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்கும்படி, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நிச்சயம் திமுக உறுப்பினர் அல்ல, திமுக அனுதாபி, அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில்... மேலும் பார்க்க

100 சார் கேள்விகளை கேட்க முடியும்! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக அமளி; வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 100 சார் கேள்விகளை என்னால் கேட்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை புதன்கிழம... மேலும் பார்க்க

யார் அந்த சார்? எஃப்ஐஆர் வெளியானதற்கு யார் காரணம்? முதல்வர் பதிலுரை

சென்னை: யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று முதல் முறையாக விளக்கம் அ... மேலும் பார்க்க