செய்திகள் :

பழைய கார்களின் விலை உயருமா? ஜிஎஸ்டி உயர்கிறது..!

post image

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், மாநில, யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை வழங்கியது. ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரையில், மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனைக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அந்த கவுன்சில் பரிந்துரைத்தது.

இந்த நிலையில், புதிய பரிந்துரைகளின்படி பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனைக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டால் பழைய கார்களின் விலை உயருமென்றாலும், இதனால் தனிநபர் மீது பெரியளவிலான தாக்கம் ஏற்படாது என ஆட்டோமொபைல் துறை சார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதிவு செய்யப்பட்ட முகவர்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் பழைய கார்கள் விற்பனையாகும்போது அதற்கு ஜிஎஸ்டி கூடுதலாக விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிலும் காரின் விலை மீது ஜிஎஸ்டி உயர்த்தப்படவில்லை. மேற்கண்ட விற்பனையாளர்கள் கார் விற்பனையால் பெறுகின்ற லாபத்தில் ஜிஎஸ்டி உயர்த்தப்படும்.

அதேவேளையில், எந்தவொரு தனி நபரும் பழைய கார்களை விற்றால் அல்லது வாங்கினால் இந்த ஜிஎஸ்டி உயர்வு பொருந்தாது. அவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டாம்.

எனினும், மேற்கண்ட விற்பனை நிறுவனங்கள் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் வரி உயர்வை வாடிக்கையாளர்கள் மீதே திணிக்கும் என்பதால் பழைய கார்களின் விலையும் சற்று உயருமென்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பழைய பயன்படுத்தப்பட்ட கார்களைப் பொறுத்தவரை, இன்ஜின் திறன் 1,200 சி.சி. வரையுள்ள சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், கூடுதல் திறன் வாய்ந்த பெரிய ரக கார்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018-க்கு முன்பு வரை, இதே கார்களுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி-யும், அத்துடன் சேர்த்து செஸ் வரி 1 - 15 சதவிகிதமும் வசூலிக்கபட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்குப்பின் ஜிஎஸ்டியில் மேற்கண்ட தளர்வு அமலானது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய பரிந்துரைகளுக்குப்பின், மின்சார கார்கள் உள்பட அனைத்து பழைய கார்களுக்கும் 18 சதவிகித ஜிஎஸ்டி விரைவில் நிர்ணயிக்கப்படுமெனத் தெரிகிறது.

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயம்: இந்திய தூதரகம்

புது தில்லி: ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க

இந்திய வா்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது: ஸ்விட்சா்லாந்து

வா்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தாமதமாகாது என்று ஸ... மேலும் பார்க்க

உ.பி.: 32 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு

உத்தர பிரதேசத்தின் முசாபா்நகா் மாவட்டத்தில் கலவரத்தால் கடந்த 1992-ஆம் ஆண்டு மூடப்பட்ட சிவன் கோயில் திங்கள்கிழமை (டிச.23) மீண்டும் திறக்கப்பட்டது. முசாபா்நகா் மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பகுதியா... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் விழிப்புணா்வில் மருத்துவா்கள் பங்கு முக்கியம்: குடியரசுத் தலைவா்

`உடலுறுப்பு தானம் செய்வதில் பொதுமக்களிடையே தயக்கம் இருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, இது பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் மருத்துவா்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்... மேலும் பார்க்க

ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞா்களுக்கு அரசுப்பணி: பிரதமா் மோடி பெருமிதம்

‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டின் இளைஞா்களுக்கு சுமாா் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணியை மத்திய அரசு வழங்கியுள்ளது; இது முன்னெப்போதும் இல்லாத சாதனை’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் சரண் சிங் பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமா் சௌதரி சரண் சிங்கின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா். மேற்கு உத்தர பிரதேசத்தில் கடந்த 1902-ஆம் ஆண்டு பிறந்த சௌதரி சரண... மேலும் பார்க்க