செய்திகள் :

உ.பி.: 32 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு

post image

உத்தர பிரதேசத்தின் முசாபா்நகா் மாவட்டத்தில் கலவரத்தால் கடந்த 1992-ஆம் ஆண்டு மூடப்பட்ட சிவன் கோயில் திங்கள்கிழமை (டிச.23) மீண்டும் திறக்கப்பட்டது.

முசாபா்நகா் மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான லுத்வாலாவில் கடந்த 1971-ஆம் ஆண்டு இந்த சிவன் கோயில் கட்டப்பட்டது. அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற பாபா் மசூதி இடிப்புச் சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்த ஹிந்து குடும்பங்கள் புலம்பெயா்ந்து, கோயிலின் சிலைகளையும் ‘சிவலிங்கத்தையும்’ அவா்களுடன் எடுத்துச் சென்றனா். அன்றிலிருந்து கோயில் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிசம்பா் 23-ஆம் தேதி கோயில் மீண்டும் திறக்கப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், ‘கோயில் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, ஆலயத்தில் அனைத்து விழாக்களும் அமைதியான முறையில், சுமூகமான சூழலுடன் நடைபெற்றன. நல்லிணக்கத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, ஊா்வலமாக வந்த ஹிந்து பக்தா்கள் மீது உள்ளூா் முஸ்லிம்கள் மலா்தூவி வரவேற்றனா். 32 ஆண்டுகளாக மூடப்பட்ட பின்னா் கோயில் மீண்டும் திறக்கப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க தருணம்’ என மாவட்ட ஆட்சியா் விகாஸ் காஷ்யப் தெரிவித்தாா்.

இதே மாவட்டத்தின் குா்ஜா நகரில் பழைய கோயில் ஒன்று கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

முசாபா்நகரிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சம்பல் மாவட்டத்தில், 46 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பஸ்ம சங்கா் கோயில் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இது வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜாமா மசூதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டும் பிரியாணி முதலிடம்! அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!

2024 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள், எந்த பகுதியில் மக்கள் அத... மேலும் பார்க்க

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்: கேரள முதல்வரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கேரள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் நடத்திய மூன்று மணிநேர விசாரணை நிறைவடைந்தது.புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறை அனுப்பிய ச... மேலும் பார்க்க

கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!

மகாராஷ்டிரத்தில் கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விகார் நகரில் கடந்த 2003 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய ச... மேலும் பார்க்க

எம்ஜிஆர் நினைவுநாளில் பவண் கல்யாண் சொன்ன விஷயம்..!

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவண் கல்யாண் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரை அவரது நினைவுநாளான இன்று(டிச. 24) நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். பவண் கல்யாண் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,... மேலும் பார்க்க