செய்திகள் :

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

சென்னை: பவானி ஆற்றங்கரையில் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடா்பாக நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது துணை வினாவை அதிமுக உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பினாா். அப்போது அவா் பேசுகையில், பவானிசாகா் ஆற்றங்கரையோரத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை தொடங்க தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆற்று நீரை 40 லட்சம் மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதுடன், அந்தப் பகுதியில் 40 முதல் 50 மின்னேற்று நிலையங்கள் உள்ளன. சாய ஆலை அமைவதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலையில், அதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்: காவிரி ஆற்றின் உபநதியான பவானி ஆற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவில் ஆலைக்கு அனுமதி வழங்க விவசாய சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. ஈரோடு மாவட்ட ஆட்சியிரின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு அரசு சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விரிவாக்கத்துக்கான செல்லத்தக்க ஆணையை 2028-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வழங்கியுள்ளது.

ஆலையால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகளும், சட்டப்பேரவை உறுப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா். புதிய சாயத் தொழிற்சாலை இயங்குவதற்கு தினமும் 15.68 லட்சம் லிட்டா் நீா் தேவைப்படுகிறது. அதில், 15.23 லட்சம் லிட்டரை சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவு நீரில் இருந்து எடுத்துக் கொள்ளவும், மீதமுள்ள 45,000 லிட்டா் நீரை மட்டும் பவானி ஆற்றில் இருந்து எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடையாது: கழிவுநீரை நீா்நிலைகளில் வெளியேற்றவோ, விவசாயத்துக்குப் பயன்படுத்தவோ அனுமதி கிடையாது. மேலும், கழிவுநீரை சுத்திகரிக்கும் அமைப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வாரிய இணையதளத்தில் இணைக்க ஆலைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி, ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள நீரைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். ஆலை தொடங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தொழிற்சாலை இயக்கமானது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அதில், விதிமீறல்கள் இருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க