செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பே பாக். வீரருக்கு அழைப்பு விடுத்தேன்: நீரஜ் சோப்ரா

post image

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை இந்தியாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததுக்கு நீரஜ் சோப்ரா மீது பரவும் வெறுப்புக்கு பதிலளித்துள்ளார்.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பெங்களூரில் வரும் மே மாதம் 24ஆம் தேதி நீரஜ் சோப்ரா கிளாசிக் (என்சி கிளாசிக்) என்ற பெயரில் போட்டிகளை நடத்துகிறார்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை இந்தியாவின் தங்க மகன் என்றழைக்கப்படும் நீரஜ் சோப்ரா கடந்த திங்கள் கிழமை (ஏப்.21) அழைப்பு விடுத்திருந்தார்.

தற்போது, பெஹல்காமில் (ஏப்.22) நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பலரும் நீரஜ் சோப்ராவையும் அவரது தாயையும் தேசத்துரோகி என மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

தாக்குதலுக்கு முன்பே அழைத்திருந்தேன்

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீரஜ் சோப்ரா கூறியதாவது:

நான் எப்போதும் குறைவாகவே பேசுவேன். ஆனால், அதற்காக எனக்கு தவறெனப்பட்டதை குறித்து பேசவேமாட்டேன் என நினைக்காதீர்கள். என் நாட்டின் மீதான காதல், என் குடும்பம் மீதான மரியாதை, கௌரவத்திற்கு கெடுதல் விளைவிக்குமாறு பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டிக்கு அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்ததை பலரும் கேள்வி கேட்கிறார்கள். அதனால் என்மீது பலரும் அவதூறையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள். அப்படி பேசுபவர்கள் எங்களது குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை.

அர்ஷதுக்கு அழைப்பு விடுக்க காரணம் அவர் ஒரு விளையாட்டு வீரர், நான் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் மட்டுமே. அதில் வேறு எதுவுமே இல்லை. என்சி கிளாசிக் போட்டியில் உலகத் தரமான வீரர்கள் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். அனைத்து போட்டியாளர்களையும் நான் திங்கள் கிழமையே (ஏப்.21) அழைப்பு விடுத்தேன். பஹல்காம் தாக்குதலுக்கு முன்னமே இதைச் செய்திருந்தேன்.

விளக்கம் சொல்வது வலிக்கிறது

இந்த சம்பவங்கள் எல்லாம் கடந்த 48 மணி நேரத்தில் நடந்தவையே. இதற்கு முன்பு அர்ஷத் நதீம் என்சி கிளாசிக் போட்டியில் பங்கேற்பது கேள்வியிலேயே இல்லை. எனது நாடும் அதன் ஆர்வமும் எப்போதும் எனக்கு முதன்மையானதாகவே இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுடன் சேர்த்து இந்தச் சம்பவத்தினால் நானும் பாதிக்கப்பட்டேன், கோபமும் அடைந்தேன். எனது நாடு இதற்காக நமது வலிமையை நிரூபித்து தக்க பதிலடி கொடுக்கும் எனவும் நம்புகிறேன்.

பல ஆண்டுகளாக நான் எனது நாட்டின் பெருமையை சுமந்து வருகிறேன். எனது நேர்மையை சந்தேகிப்பது வருத்தமளிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் தேவையே இல்லாமல் சந்தேகிப்பவர்களுக்காக நான் விளக்கம் சொல்வது வலிக்கிறது.

நாங்கள் சாதாரண மனிதர்கள்

நாங்கள் சாதாரண மனிதர்கள். எங்களை எதிலும் சேர்க்காதீர்கள். பலவிதமான தவறான கருத்துகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. நான் பொதுவாக எதுவும் பேசமாட்டேன் என்பதால் அது உண்மையாகிவிடாது.

மக்கள் எப்படி தங்களது கருத்துகளை மாற்றிக்கொள்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. ஒர் ஆண்டுக்கு முன்பாக எனது அம்மாவின் கருத்துக்காக அவரது கபடமற்ற தன்மையையும் எளிமையையும் புகழ்ந்தார்கள். தற்போது அதே கருத்துக்காக அவரை நோக்கி வெறுப்பை உமிழ்கிறார்கள்.

மீண்டும் கடினமான உழைத்து நன்மதிப்பைப் பெறுவேன். ஜெய்ஹிந்த் எனக் கூறியுள்ளார்.

தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீமை நீரஜ் சோப்ராவின் தாய், ”அவரும் என் மகன் போலத்தான்”எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டுக்காக அலெக... மேலும் பார்க்க

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாஸிபிள்!

மிஷன் இம்பாஸிபில் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகின்றது.பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் அதிரடி ஸ்டண்டுகளுக்கு புகழ்பெற்ற மிஷன் இம்பாஸிபில் திரைப்படங்களின் 8வது பாகம... மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடத்தின் புதிய பீடாதிபதியாக கணேச சர்மா தேர்வு!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மாவுக்கு வரும் ஏப்.30 ஆம் தேதி காஞ்சி சங்காராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி வழங்கவுள்ளார். காஞ்... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் ரூ.10 கோடியைக் கடந்த சச்சின்!

விஜய்யின் சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் ம... மேலும் பார்க்க