பெருந்துறை அருகே 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பெருந்துறை அருகே வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனர். இது குத்து 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை அருகே தமிழக அரசால் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருப்பதாக கோவை குற்ற உளவுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆய்வாளா் கமலி மற்றும் போலீஸாா் பெருந்துறையை அடுத்த வாவிகடை, பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் ரைஸ் மில்லில் சோதனை மேற்கொண்டனா்.
இங்கு சுமாா் 40 டன் அரிசியும், கடத்த பயன்படுத்திய இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் மேல் நடவடிக்கைக்காக ஈரோடு உணவுப் பொருள்கள் பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து, பெருந்துறைச் சோ்ந்த சம்பத்குமாா், தருமபுரி மாவட்டம், பெரும்பாளியைச் சோ்ந்த நடராஜ் மகன் சிவன் (35) உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.