சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்? அமைச்சா் விளக்கம்
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!
உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் தடுக்கப்பட்டு, அவர்களை ஜனநாயக மனித உரிமைகள் சங்கத்தினர் பணிநீக்கம் செய்தனர்.
மேலும், இனிவரும் காலங்களில் கோயில் பணிகளில் முஸ்லிம் சமூகத்தினர் ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல், உலகளவில் கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியாவும், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.
இதையும் படிக்க:இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!