செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க, தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. திருச்சி சிவா, உள்பட சமாஜவாதி, திரிணாமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக கூட்டத்தின் தொடக்கத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரசு விளக்கமளித்தது. கூட்டத்தின் முடிவில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.

காஷ்மீரில் தொடர்ந்து அமைதில் நிலவ நடவடிக்கை தேவை என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தாா், ஜோா்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன. ஜம்மு-காஷ்மீா், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா... மேலும் பார்க்க

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவளித்ததாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந... மேலும் பார்க்க

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த நபரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீா்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் முடிவு: நிபுணா்கள் கருத்து

‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும்’ என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து அணைகள், ஆறுகள் மற்றும் மக்க... மேலும் பார்க்க