செய்திகள் :

பாகிஸ்தானில் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொல்லும் மர்ம நபர்கள்!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தீவிரவாதியின் கூட்டாளி ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

சர்வதேச அளவில் தீவிரவாதியென அறிவிக்கப்பட்டவரும் ஜெய்ஷ்-எ-முஹம்மது எனும் தீவிரவாத இயக்கத்தின் நிறுவனருமான மௌலானா மசூத் அஸாரின் நெருங்கிய கூட்டாளியான காரி எயிஜாஸ் அபித் என்ற நபரை தலைநகர் பெஷாவரில் கடந்த மார்ச் 30 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெஷாவரின் பிஸ்தகாரா பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அபித்தின் கூட்டாளியான காரி ஷாஹித் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் ஊடகங்களின் வெளியிடப்பட்ட செய்திகளில், கொலை செய்யப்பட்ட அபித் ஹலே-இ-சுன்னாஹ் வால் ஜமாத் என்ற அமைப்பின் உறுப்பினராகவும் சர்வதேச அளவிலான கத்ம்-இ-நபுவாத் அமைப்பின் மாகாணத் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் இந்த அமைப்புகளின் மூலம் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆள் சேர்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் மதகுருக்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஆனால், இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் அனைவரும் லஷ்கர்-எ-தையிபா, ஹிஸ்புல் முஜாஜிதீன் மற்றும் ஜெய்ஷ்-எ-முஹம்மது ஆகிய தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களில் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்களால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2000-ம் ஆண்டு மௌலானா மசூத் அஸாரால் ஜெய்ஷ்-எ-முஹம்மது துவங்கப்பட்டதிலிருந்து ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இந்த அமைப்பு பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு ... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கருடன் ஆர்.என். ரவி சந்திப்பு

புதுதில்லி: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசினார். மேலும் பார்க்க

மதுவிலக்கு: வனப்பகுதியில் சிறப்பு சோதனை

நெய்வேலி: கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் மதுவிலக்கு சம்பந்தமாக சிறுபாக்கம் காவல் சரகப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை சிறப்பு சோதனை நடத்தினர். காட்டுப்பகுதிகளில் கள்ளத்தனமாக சாரா... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ பெ... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் ச... மேலும் பார்க்க