"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அ...
பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!
பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் குழந்தைகள் இருவருக்கு, போலியோ தொற்று பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிகழாண்டில் (2025) போலியோ பாதிப்புகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கைபர் பக்துன்குவாவில் 15 பாதிப்புகளும், சிந்து மாகாணத்தில் 6 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் - பல்டிஸ்தானில் தலா ஒரு பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளன.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டுமே தற்போது போலியோ தொற்றின் பரவல் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானில், கடந்த 2023 ஆம் ஆண்டு 6 போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டன, 2021-ல் வெறும் ஒரு பாதிப்பு மட்டுமே பதிவானது. ஆனால், 2024-ம் ஆண்டில் மட்டும் 74 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.
மேலும், பலூசிஸ்தான் மாகாணத்தில் போலியோ தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வரும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!