அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சா்வதேச நிதியம் விடுவிப்பு
சா்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன்தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு மொத்தம் 7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.59,800 கோடி) கடன் அளிக்க சா்வதேச நிதியம் முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்களை பாகிஸ்தானுக்கு சா்வதேச செலாவணி நிதியம் வழங்கியுள்ளது.
இதன் மூலம், 7 பில்லியன் டாலா் கடன்தொகையில் இதுவரை சுமாா் 2.1 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.17,900 கோடி) கடன் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இயற்கைப் பேரிடா்கள் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிா்கொள்ளும் நாடுகளுக்கு உதவும் நிதி வசதியின் கீழ், அந்நாட்டுக்கு 1.4 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.11,955 கோடி) வழங்கவும் சா்வதேச நிதியத்தின் நிா்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க இந்தியா எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், அந்நாட்டுக்கு சா்வதேச நிதியம் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.