பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தமிழராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்: நயினார் நாகேந்திரன்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பாராட்டி, தமிழக பாஜக பேரணி நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் பாராட்டும் விதமாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தமிழக பாஜக சார்பில் பேரணி நடத்தினர்.
பேரணியைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்போர், தமிழர் என சொல்வதற்கு அருகதை அற்றவர்களே.
நாட்டுப்பற்று இல்லாதவர்கள், பாகிஸ்தானுக்கே செல்லுங்கள். காங்கிரஸார்கூட பாகிஸ்தானை எதிர்க்கின்றனர். ஆனால், நம் முதல்வர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. அதனால்தான், பாகிஸ்தானுக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும், போருக்கு தயாராகவே உள்ளோம்.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்காகத்தான், இந்தமுறை நம் பிரதமர் மன்னித்துள்ளார். இருப்பினும், அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கிறது என்று கூறினார்.